வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்த

varicose noyai kunapadutha. To cure the problem of varicose wine

வெரிகோஸ்

வெரிகோஸ் வெயின் ஆண், பெண் என இரு பாலருக்கும் வரும். இருப்பினும் பெண்களை அதிகமாக தாக்குகிறது என்கின்றனர். இந்த வெரிகோஸ் வெயின் வருவதற்கு முக்கிய காரணம், அதிகமான உடல் எடையால் இரத்த அழுத்தம் அதிகமாவது ஆகும்.

வெரிகோஸ் வெயின் என்பது காலின் தொடைப்பகுதிக்கு கீழோ அல்லது முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டிருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில்  வலியும்,வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும்.

கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும்.   நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

யார் யாருக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்

  • தொடர்ச்சியாக நின்றுகொண்டே செய்யும் பணியில் இருப்பவர்கள்.
  • 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
  • அதீத உடற்பருமன் உடையவர்கள்.
  • பரம்பரையாக வெரிகோஸ் வெயின் பாதிப்பு உடையவர்களின் வாரிசுகள்.
  • கர்ப்பிணிகளில் அடிவயிற்று நரம்புகளில் அதிக அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள்.

ஏன் ஏற்படுகிறது?

இதயத் துடிப்பால் ரத்தக்குழாய்கள் வழியாக உடல் முழுவதும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்தம் பாய்கிறது. இப்படி உடல் முழுக்கப் பயணிக்கும் ரத்தம், உடல் திசுக்களால் பயன்படுத்தப்பட்டு ஆக்சிஜனேற்றம் (De-oxegenation) அடைந்த பின், மீண்டும் இதயத்தை நோக்கிப் பயணிக்கிறது. இதயத்துக்குக் கீழ்ப்பகுதியில் உள்ள உறுப்புகளால் பயன்படுத்தப்பட்ட ரத்தம் மீண்டும் இதயத்துக்குச் செல்லும்போது, புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கிச் செல்ல வேண்டி உள்ளது. இதற்கு உதவியாக, ரத்தநாளங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் கதவுகள் போல திறந்து, மூடும் வால்வுகள் அமைந்திருக்கின்றன. இந்த வால்வுகள் மேலே சென்ற ரத்தத்தை மீண்டும் கீழ் நோக்கி எதிர்திசையில் வர அனுமதிக்காது. வயதாகும்போது, ரத்த நாளங்கள், தளர்ச்சி அடையும். அளவில் பெரிதாகும். இதனால், வால்வுகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளி அதிகரித்து, மேலே செல்ல வேண்டிய ரத்தம் புவி ஈர்ப்பு விசையால் கீழ் நோக்கிப் பயணிக்கும். குறிப்பாக, கால்களில் இந்த பாதிப்பு இருக்கும். இவ்வாறு எதிர்த் திசையில் கீழ்நோக்கிப்போகும் ரத்தம், ரத்தக் குழாயைச் சுருளச்செய்கிறது (Tortuous). இதனால், தொடையிலும் கணுக்காலுக்கு மேற்புறமும் ரத்தக் குழாய்கள் புடைத்துக்கொண்டு பழுப்பு அல்லது நீல நிறத்தில் வெளியே தெரியும்.

பக்கவிளைவுகள்

  • வெரிகோஸ் நரம்பின் உள்ளே ரத்தஓட்டம் தடைப்படுவதால், நாளடைவில் ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.
  • இது போன்று பல நரம்புச்சுருள்கள், முழங்கால், தொடை ஆகியவற்றில் ஏற்பட்டால் கணுக்கால் வீக்கம் (Venous eczema), புடைத்த ரத்த நாளங்கள் உடைந்து ரத்தக் கசிவு உள்ளிட்டவை ஏற்படும்.
  • ஆண்களுக்குத் தொடையில் ஏற்படும் வெரிகோஸ் வெயின் பாதிப்பு, நாட்பட்ட விதைப்பை வீக்கத்தை (Varicocele) உருவாக்கக்கூடும்.

இயற்கையான முறையில் குணப்படுத்த அருமையான பாட்டி வைத்தியம் 

செய்முறை:
பச்சை தக்காளி பழங்களை எடுத்து அதனுடன் தேன் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். நன்றாக தண்ணீர் பதம் வரும் வரை அரைக்கவும். இந்த ஜூஸை தினமும் காலையில் காலை உணவுக்கு முன் குடிக்க வேண்டும்.
மேலும் இந்த தக்காளி பழங்களை தோலை உரித்து விட்டு வெரிகோஸ் வெயின் ஏற்பட்ட இடத்தில் தேய்க்கவும் செய்யலாம்.
குறிப்பு:
வெரிகோஸ் வெயின் சிகிச்சை எடுக்கும் போது உங்கள் மருத்துவரிடம் டயாபெட்டீஸ், ஹைபர் டென்ஷன் இருக்கா என்பதை அறிந்து  கொள்வது நல்லது. பச்சை தக்காளியில் உள்ள அல்கலாய்டு சோலனின் இயற்கையாகவே நமது உடலில் இரத்தம் கட்டுதலை குறைக்கிறது.  இது உங்கள் நரம்புகளின் சுவர்களை வலிமையாக்குகிறது. எனவே எளிதாக வெரிகோஸ் வெயினை குணப்படுத்துகிறது.

2 COMMENTS

  1. ஆம் வெரிகோஸ் வந்தால் குணப்படுத்துவது கடினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here