கொடிய நோயையும் போக்கும் தொப்புள் கொடி

kodiya noyaium pokkum thoppul kodi The umbilical cord is a deadly disease

thopulkodi_thayathu

தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பாலமாக செயல்பட்டு உணவு மற்றும் உணர்வுகளை பகிரும் ஒரு அற்புதமான அமைப்பே தொப்புள் கொடி. இந்த தொப்புள் கொடியில் மூன்று இரத்த குழாய்கள் இருக்கும். அதில் 2 தமனிகளும், 1 சிரைகளும் ஆகும். ஒருவேளை குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு இருந்தாலோ அல்லது இதய நோய் இருந்தாலோ, ஒரே ஒரு இரத்தக்குழாய் மட்டும் தெரியும். இத்தகைய தொப்புள் கொடியானது குழந்தை பிறந்த பின்னர் வெட்டப்படும். மேலும் குழந்தையின் தொப்புள் கொடியை மிகவும் கவனமாக, அது உதிரும் வரை பார்த்துக் கொள்ள வேண்டும். 10-15 நாட்களுக்குள் தொப்புள் கொடியானது உலர்ந்து உதிர்ந்துவிடும். இல்லாவிட்டால், குழந்தைக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். ஆகவே குழந்தையின் தொப்புள் கொடியை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் இடுப்பில் தாயத்து கட்டுவது எதற்கு தெரியுமா? தமிழரின் மிகப்பெரிய அறிவியல் உண்மை

தாயத்துக்குள்ளே யந்திரம் இருக்கும், திருஷ்டி படாம இருக்கும் என பல காரணங்கள் கூறுவர். உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா?

சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம் செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.

அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?

அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.

பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர், இந்த தாயத்தை திறந்து அதில் உள்ள தொப்புள் கொடி பொடியை சிறிது எடுத்து நோய்க்கு ஏற்ப நீரிலோ பாலிலோ கலந்து தருவார், தொப்புளில் மிஞ்சும் பொடியை தடவி விடுவார். அவளவு சக்திவாய்ந்ததாம் இந்த போடி, எப்பேர்ப்பட்ட நோயும் குணமடையுமாம்.சில நாட்களில் நோயும் பறந்து போகும். இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை, என்பது தான் வருத்தம்.

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி, இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்.

உண்மையில் இன்று நாம் முட்டாளா? இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா? என்று சிந்தித்து பார் தமிழா…! இனியாவது விழிப்போம். நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்.!! ஸ்டெம் செல் ரிசர்ச் முதன் முதலில் செய்த நம் முன்னோர்கள் வழியில் நடப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here