தலைவலி உயிர் போகுதே என்று துடிக்கிறீர்களா ?..

Do you have a headache?

தலைவலி உயிர் போகுதே என்று துடிக்கிறீர்களா ? வீட்டிலேயே இதற்கான எளிய பாட்டி வைத்தியம் உள்ளது.

பெரும்பாலானோருக்கு அதிக மன அழுத்தம் காரணமாகவே தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு குறைவான சக்கரை அளவு, ஒவ்வாமை, சத்து குறைபாடு, சரியான தூக்கம் இன்மை, அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவே தலைவலி ஏற்படுகிறது.

தலைவலியை போக்குவதற்குரிய எளிய பாட்டி வைத்தியம் 

  • மிளகாய், மிளகு, ஆகியவற்றை ஒன்றாக இடித்து பொடி செய்து அந்த பொடியை இரண்டு லிட்டர் (2L ) தண்ணீரில் போட்டு அரை லிட்டராக (1/2 L ) காய்ச்சி வடித்து அதனுடன் பால், நல்லெண்ணெய் கலந்து பதமாய் காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர  தலைவலி தீரும்.
  • டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.
  • வெற்றிலை சாறு எடுத்து அதில் கற்பூரத்தை போட்டு நன்றாக குழைத்து நெற்றியில் பூச தலைவலி குணமாகும்.
  • புதினா இலையை இடித்து சாறு எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி தீரும்.
  • முள்ளங்கி சாறு பருகி வந்தால் தலைவலி தீரும்.
  • காப்பிக் கொட்டை தூளை கொதி நீரில் போட்டு ஆவி பிடிக்க தலைவலி நீங்கும்.
  • கிராம்பு, சீரகம் ஆகியவற்றை சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here