வீட்டில் செய்யக்கூடிய எளிய மருத்துவ குறிப்புகள்

வீட்டில் செய்யக்கூடிய எளிய மருத்துவ குறிப்புகள்
எலுமிச்சை 
 • எலுமிச்சம் சாற்றுடன் தேன் கலந்து காலை, மாலை சாப்பிட இருமல் தணியும். நற்சீரகத்தை அரைத்து எலுமிச்சம் சாற்றுடன் கலந்து காலை, மாலை சாப்பிடவும் இருமல் நிற்கும்.
 • தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சம் துண்டைத் தேய்த்தால் விஷம் இறங்கும்.
 • தலைவலிக்கு தேநீரில் எலுமிச்சம் சாறு கலந்து குடிக்க வலி தீரும்.
உப்பு
 • உப்பை வறுத்து துணியில் கட்டி பல், காதுவலி போன்றவற்றிற்கு ஒத்தடம் கொடுக்கலாம்.
 • உப்பை அதிக அளவு நீரில் கரைத்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கி, முரசும் பலமடையும்.
 • சிறிதளவு உப்பை நீரில் கரைத்து வாயில் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க நெஞ்செரிவு நீங்கும்.
 • பசுமாட்டிற்கு உணவுடன் சிறிது உப்பு கலந்து கொடுத்தால் அதிக பால் சுரக்கும்.
புளி 
 • புளியம் இலையுடன் உப்பும், தேசிக்காய் சாரும் சேர்த்து வறுத்து பொட்டலம் கட்டித் தாங்கக்கூடிய சூட்டில் மூட்டு வலி, வீக்கங்களுக்கு ஒத்தடம் கொடுக்க வலி நீங்கும்.
 • புளியமிலை அவித்த நீரால் நாட்பட்ட புண்களைக் கழுவ சுகம் வரும், தினமும் சிறிதளவு புளியை உணவுடன் சேர்த்து உண்ண அமிலத்தன்மை குறைவடையும்.
 • சம அளவு உப்பும், புளியும் கலந்து சூடாக்கி சுழுக்கு வீக்கத்திற்கு பத்து போடலாம்.
 • புளியம்பட்டை அவித்த நீரால் நாட்பட்ட சலரோக புண்களை கழுவ சுகம் வரும்.
இஞ்சி 
 • இஞ்சிசாறும், தேனும் கலந்து சாப்பிட பித்தம் முறிபடும். வயிற்றில் ஏற்படும் வாய்வுத் தொல்லை, செமிபாட்டுக் குறைவுக்கு காலையில் இஞ்சியை தேநீரில் போட்டுக் குடிக்க சுகப்படுத்தும், இது இருதயத்தையும் பலப்படுத்தும்.
 • இஞ்சி, உள்ளி அரைத்து விழுதை சமையலில் சேர்த்தால் உணவுச் செமிபாட்டுக்கும், பித்த வாய்வுத் தொல்லைக்கும் நல்லது.
 • இதய நோவுக்கு (heart attack ) இஞ்சியை தட்டி அரைத்து நாக்குக்கு கீழ் வைத்தும், உள்ளங்களிலும், உள்ளங்கைகளிலும் பூசி நன்கு தேய்க்க வேண்டும்.
 • இஞ்சியை பாலில் போட்டு காச்சி காலை வெறும் வயிற்றிலும், இரவிலும் பருக நீரிழிவு கட்டுப்படும், நரம்புச்சோர்வு நீங்கும்.
உள்ளி 
 • உள்ளியை அரைத்து வீக்கத்திற்கு பத்து போடலாம்.
 • பாலில் உள்ளியை வைத்துச் சாப்பிட அல்சர் குணமடையும்.
 • வாய்வு, வயிற்றுக்குத்துக்கு உள்ளியை வருது சாப்பிடலாம்.
 • உள்ளியை அதிகம் பாவித்தால் பிரஸர், கொலஸ்ரோல் கட்டுப்படும்.
 • காதுகுத்துக்கு பெரிய உள்ளி பல்லை எடுத்து தோலை உரித்து அடிப்பகுதியை சிறிது கிள்ளிவிட்டு, காதில் அடைத்து வைத்தால் குணமடையும்.
 • மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிக்கு உள்ளியை நெய்யில் வறுத்து ஆறிய பின் சக்கரை சேர்த்து சாப்பிட வலி நிற்கும்.
 • முகத்தில் தோன்றும் பருக்களுக்கு பச்சை உள்ளியை தடவ பருக்கள் குறைவடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here