10 நிமிடத்தில் சுவையான ஆரோக்கியமான பால் அல்வா (milk alva) செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
மாட்டு பால் 500 மில்லி
நெய் 300 கிராம்
சீனா கற்கண்டு 500 கிராம்
குங்குமப்பூ விராகனெடை 4 கிராம்
கஸ்தூரி குன்றுமணி எடை 2 கிராம்
செய்முறை:
பாலை அடுப்பில் ஏற்றி ஏடு விழாது துழாவிக்கொண்டே காய்ச்சி பால் எல்லாம் சுண்டி திரண்ட பின்பு நெய்யை விட்டு புரட்ட வேண்டும் இதற்கு முன்பே கற்கண்டை பாகாகக் காய்ச்சி மது பாகத்தில் இறக்கி வைக்க வேண்டும் கற்கண்டு பாகை மேற்படி பாலில் விட்டு கிண்டி கெட்டி பதம் ஆனவுடன்
குங்குமப்பூவை பன்னீரில் அரைத்து சேர்க்க வேண்டும் கஸ்தூரியை தூள் செய்து தூவி எல்லாவற்றையும் நன்றாக புரட்டி பதனம் செய்ய வேண்டும்
நாள் ஒன்றுக்கு காலை மாலை இருவேளை ஒரு பலம்(35) கிராம் வீதம் சாப்பிடலாம்
உபயோகம் இரத்த விருத்தி உண்டாகும் இந்திரிய நஷ்டம் தீரும் தேகம் கொழுக்கும்