எருக்கஞ்செடியின் மருத்துவ பயன்கள்

எருக்கஞ்செடியின் மருத்துவ பயன்கள்

எருக்கஞ்செடி என்பது ஒரு தெய்வீக மரமாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் எருக்கன் செடி சூரிய பகவானின் தன்மை கொண்ட ஒரு செடியாக இருக்கிறது. பொதுவாக செடிகள், மரங்கள் வளர்வதற்கு தண்ணீர் மிக அவசியம். ஆனால் இந்த வெள்ளை எருக்கன் செடி 12 ஆண்டுகள் நீரின்றி இருந்தாலும் சிறப்பாக வளர்ச்சி அடையும் தன்மை கொண்ட ஒரு அபூர்வ செடி வகையாக இருக்கிறது. மேலும் இந்த வெள்ளை எருக்கன் செடி சிவபெருமானின் அம்சம் கொண்டதாக கருதப்படுகிறது.

பொதுவாக மரங்களில் இருந்து பால் போன்ற திரவம் வடியும் பால் வகை செடிகளை வீட்டில் வளர்க்க கூடாது என்பது வாஸ்து சாஸ்திர ரீதியாக உள்ளது. எனினும் ஒரு சில அறிஞர்கள் இந்த வெள்ளை எருக்கன் செடி வீட்டிற்கு முன்பாக உணரலாம் என கூறுகின்றனர். வீட்டிற்கு முன்பாக இருக்கின்ற வெள்ளை எருக்கன் செடி அந்த வீட்டிற்குள்ளாக துஷ்ட சக்திகள் மற்றும் தீய மாந்திரிக சக்திகள் நுழையாதவாறு தடுக்கும் ஆற்றல் மிக்க பாதுகாப்புக் கவசம் போல் செயல்படுகிறது.

எனினும் சிவபெருமானின் அம்சம் கொண்டதாக கருதப்படுகின்ற வெள்ளருக்கன் செடியை முறையாக பராமரிப்பவர்கள், அந்தச் செடி வளரும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்பவர்கள், தங்களையும் தங்கள் வீடுகளையும் எப்போதும் சுத்தபத்தமாக வைத்துக் கொள்பவர்கள் மட்டுமே வீட்டுக்கு முன்பாக வளர்க்கலாம் என்றும், அப்படி இயலாதவர்கள் அத்தகைய செடிகளை சிவபெருமான் கோவில் நந்தவனங்களில் நட்டு வைப்பதே சிறந்தது என அறிவுறுத்துகின்றனர்.

மிக சக்தி வாய்ந்த இந்த வெள்ளை எருக்கன் செடியை வீட்டிற்கு முன்பாக வளர்க்க இயலாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் அல்லது உங்களுக்குத் தெரிந்த சித்த வைத்தியரிடம் கூறி வெள்ளெருக்கன் வேர் கட்டை ஒன்றை வாங்கி, உங்கள் வீட்டுற்கு முன்பாக கட்டி தொங்கவிடுவதாலும் அல்லது உங்கள் வீட்டின் வாயில் அருகில் வைத்து விடுவதாலும் எதிர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து வீட்டில் உள்ளவர்களின் வாழ்வில் சுபிட்சங்களை ஏற்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here