- மட்டன் துண்டுகள் மற்றும் எலும்பு துண்டுகளை சேர்த்து குழம்பு செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதோடு பூண்டு,இஞ்சி மற்றும் சின்ன சீரகம் சேர்க்கும் போது நல்ல ஜீரண தன்மையை கொடுப்பதுடன் சுவையும் அதிகரிக்கும்.
- ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய் பொடி, வெந்தயப்பொடி,பெருங்காய பொடி கலந்து தாளித்து கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் ரெடி.
- மீனுடன் பூண்டு, வெந்தயம், கறிவேப்பிலை, புளி, மிளகாய், உப்பு இவையாவும் சேரும் போது சுவை கூடுகிறது. மீன் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
- பொதுவாக ஒரு 100 கிராம் மடடன் துண்டுகளை எடுத்து தனித்தனியாக சூப் செய்வது மிகவும் சுலபம். இந்த சூப்பை காலை, மதியம், இரவு என எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்.
- வாரம் ஏழு முடடைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரைவிலேயே வரும் வாய்ப்பு இருக்கிறது.
- உப்பு போடட நீரில் முடடைகளை 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து குளிர்ந்த நீரில் 10 நிமிடங்கள் போட்டு வைத்து பிறகு சமைக்கலாம். குளிர்ந்த நீரில் போட்டு வைப்பதால் முடடையை தோல் உரிக்க சுலபமாக இருக்கும்.
- இறாலை கழுவும் போது கையில் தண்ணீர் வடிந்து கொண்டே இருப்பதை தடுக்க, நியூஸ் பேப்பரை விரித்து அதில் வைத்து கொள்ளுங்கள். கையில் உப்பு, எண்ணெய் தோய்த்து கொண்டால் இறால் வாசணை கையில் அதிகம் ஒட்டாது.
- சிக்கன் பொரிக்கும் முன்பே கறிவேப்பிலையை எண்ணையில் பொறித்து எடுத்தால் சிக்கனில் அந்த வாசம் நன்றாக இருக்கும்.
- வாரம் ஒரு முறை மீனை உட்க்கொண்டு வந்தால் முதுமையில் ஏற்படும் ஞாபக மறதியை தடுக்கலாம்.
- தினசரி ஒரு கைப்பிடி அளவுக்கு பாதாம்பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளை சாப்பிடுங்கள். இதை சாப்பிடடாள் இருதய நோய் அபாயம் வெகுவாக குறையும்.