வியக்கவைக்கும் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கருஞ்சீரகம்….!!

viyakka vaikkum atputha maruththuva kunangal konda karuncheeragam. Karuncirakam with amazing medical qualities

karnseerakam

கருஞ்சீரகத்தில் இன்டெர்பிதான் என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மச்சை உற்பத்தியை சீராக்கி புற்றுநோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது. புற்றுநோய் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சிரகத்தை சுடுநீரில் கலந்து காலையும் மாலையும் பருகலாம். சுடுநீருக்கு பதிலாக தேன் கலந்து சாப்பிடலாம்.

கருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய் உள்ளது. அது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி, கழிவுகளை எளிதாக வெளியேற்றும் தன்மை கொண்டது. இரைப்பையில் பக்டீரியாவால் உண்டாகும். நோய்த்தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சிரகம் மருந்தாக பயன்படுகிறது.

தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சிரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட வேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.

பிரசவத்திற்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து ஒரு தேக்கரண்டி கருஞ்சிரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். கருஞ்சீரகம் பல முக்கியமான சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

கருஞ்சீரகத்தில் “தைமோகியோனின்” என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் உடலுக்கு நன்மை செய்ய கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும்.

தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. இதனை பொடி கரப்பான் மற்றும் சொரியாஷிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகள் மறையும். குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சிரகத்தை அரைத்து சேர்த்து பயன்படுத்துவது நல்லது.

1 COMMENT

  1. சிறந்த பதிவு, எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here