முடி வளர்ச்சி, கல்லீரல் பாதிப்பு, சளித்தேக்கம், செரிமானம், இதய நோய், சக்கரை நோய், இரத்த சோகை, கொழுப்பு கரைய
உணவில் சுவையை கூட்டவும் கறிவேப்பில்லை உதவுகிறது. அதே நேரம், அவற்றில் பல விதமான உடல்நல பயன்களும் அடங்கியுள்ளது.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. அத்துடன் உடலில் தேங்கியுள்ள தீவையற்ற கொழுப்புகளை கரைப்பதோடு நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது.
முடி வளர்ச்சி
- தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் முடி நன்கு வளர்வதோடு கருமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
- பாதிப்படைந்துள்ள முடி வேர்களை சீர் செய்யும்.
- முடி கொட்டுவது குறையும்.
கல்லீரல் பாதிப்பு
- தினமும் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கல்லீரல் பாதுகாப்பாக இருப்பதோடு, சீராகவும் செயல்பட தூண்டுகிறது.
சளித்தேக்கம்
- கறிவேப்பிலையை பொடியாக்கி தேன் கலந்து தினமும் இரண்டு வேலை உண்டு வந்தால் உடலில் உள்ள சளி முறியும்.
செரிமானம்
- அதிகாலையில் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் செரிமான பிரச்சனை தீரும்.