இன்றைய உலகில் சோர்வு என்பது ஒரு நோயாகவே மாறிவிட்டது. சோர்வு அதிகம் இருப்பதால் உங்கள் உறவினர்கள் நண்பர்களுடன் அதிகமாக நேரத்தை செலவிடமுடியாமல் போவதோடு, அலுவலகங்களிலும் வேலை செய்வதிலும் சிரமங்கள் ஏற்படும்.
இவ்வாறு சோர்வாக இருப்பவர்களுக்கு முகம் கறுத்து வாடிப்போய் எந்நேரமும் மன அமைதி இல்லாமலும் தூக்க சோர்வுடனும் காணப்படுவார்கள்.Free from boredom and tiredness on the face
எனவே சோர்வு எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து எப்படி விடுபட்டு வாழ்க்கையை சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழலாம் என்பதை பார்ப்போம்.
காரணம்
அதிக வேலை, நிம்மதியான உறக்கம் இல்லாமை, மனக்குழப்பம், யோசனை,வயது போன்றவற்றுடன், ஆரோக்கிய பிரச்சினைகளான இதய நோய், நீரிழிவு, தைராய்டு, ஆர்த்ரிடிஸ் போன்றவையும் சோர்வுக்குரிய முக்கிய காரணிகளாகும்.
செய்யவேண்டியவை
தூக்கம்
நிம்மதியான தூக்கமின்மை சோர்வை உண்டாக்குவதோடு, ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. எனவே தினமும் சுமார் 7-9 மணிநேரம் தூங்க வேண்டும்.
- 1லிருந்து 2 வயது வரை – 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும் . ஆனால் 9லிருந்து 16 மணிநேரங்கள் வரை தூங்கலாம்.
- 3லிருந்து 5 வயது வரை – தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும். 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது
- 6லிருந்து 13 வயது வரை – 9 மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும்.தினமும் 7 மணிநேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணிநேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல.
- 14 முதல் 17 வயது வரை – 8லிருந்து 10 மணிநேரம் வரைதான். இந்த வயது சிறார்கள் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணிநேரங்களுக்கு குறைவாகத் தூங்குவது தவறு
- 18லிருந்து 25 வயது வரை / 26லிருந்து 64 வயது வரை – 7லிருந்து 9 மணி நேரங்கள் தூங்கவேண்டும். 6 மணிநேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலோ போகக்கூடாது.
- 65 வயது, அதற்கு மேல் – 7லிருந்து 8 மணிநேரம் வரை, ஆனால் ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணிநேரத்துக்கு மேலோ போகக்கூடாது
தரமான தூக்கத்திற்கான பரிந்துரைகள்
- படுக்கும் நேரத்தில் மனத்தை அமைதிப்படுத்தும் சில நடைமுறைகள்.
- சௌகரியமான படுக்கை மற்றும் தலையணைகள்.
- படுக்கையறையில், சரியான வெப்பநிலை, ஒலி மற்றும் ஒளி அளவு
- மது மற்றும் காபி போன்ற தூக்கத்தை “ஒளிந்திருந்து திருடும்” பொருட்கள்.
- மின்னணுவியல் கருவிகள் ( கைத்தொலைபேசி , ஐ.பாட் போன்றவை) படுக்கப்போகுமுன் அணைக்கப்படவேண்டும்
உடற்பயிற்சி
தினமும் காலையில் எழுந்ததும் ஏதேனும் ஒரு உடற்பயிற்சி செய்துவந்தால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்பாக செயற்படலாம். எனவே ரன்னிங், வாக்கிங், யோகா, சைக்கிளிங் போன்ற சிம்பிளான சில பயிற்சிகளை அன்றாடம் மேற்கொண்டு வாருங்கள். இதனால் நிச்சயம் நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
தண்ணீர்
நமது உடலும் கார் எஞ்சின் போன்றது, நமது உடலுக்கு போதிய அளவுக்கு தண்ணீர் இருந்தால் தான் சீராக இயங்கும். உடலில் நீர் சரியான அளவு இல்லாவிட்டால், செயற்பாடுகள் குறைந்து அதிக சோர்வை உண்டாக்கும். எனவே தினமும் சுமாராக இரண்டரை லிட்டர் தண்ணீர்! குடிக்கவேண்டும். இதனால் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.
அதிக எடை
உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், உடலில் ஆற்றல் குறைவாகவே இருக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க, சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வாருங்கள்.