பாத வெடிப்பு சரியாக இயற்கை மருத்துவம்

paatha vedippu / piththa vedippu kunamaka siddha maruthuvam Foot eruptions are an exactly natural medicine

நம் அனைவருக்கும் நமது பாதம் அழகாக இருக்கவேண்டும் என்று ஆசை இருக்கும், குறிப்பாக பெண்களுக்கு. பெரும்பாலானோருக்கு பாதத்தில் ஏற்படும் பிரச்சினை பித்த வெடிப்பு. அநேகமான பெண்கள் தங்களது முகத்தை அழகுபடுத்த செலவிடும் நேரத்தில் பாதியைகூட பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பாத வெடிப்பால் கால் அசிங்கமான தோற்றத்தை காட்டும்.

இதற்கு கரணம் பாதங்களை சுத்தமின்றி வைத்திருத்தல், ஈரப்பதன் இல்லாமை, கடினமான காலணி அணிதல், மற்றும் சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையாகக்கூட இருக்கலாம்.

பாத வெடிப்பை நீக்கி பாதத்தை அழகு படுத்த இயற்கை வைத்தியம்……

 1. குதிகால் வெடிப்பு மறைய பெரிய வாளியில் சுடு தண்ணீரை நிரப்பி அதில் உப்பு, எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் இட்டு, 20 நிமிடங்கள் வரை பாதங்களை முக்கி ஊறவைத்துக்கொள்ளுங்கள். பின், உரைக்கல் அல்லது பாத ஸ்க்ரப்பரை கொண்டு, பாதங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தேய்க்கவும். ஒரு வாரம் தொடர்ந்து இப்படி செய்ய பித்த வெடிப்பு காணாமல் போய்விடும்.
 2. தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்த வெடிப்பு முற்றிலும் குணமாகும்.
 3. வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைத்து அதில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் பாத வெடிப்பு நீங்கும்.
 4. இரவு நேரத்தில் உறங்க செல்லும் முன் காலை நன்றாக கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவிவர பித்த வெடிப்பை தடுக்கலாம்.
  தினமும் குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும்.
  பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்தால் பாத வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
 5. வெது வெதுப்பான நீரில் பாதங்களை, 10 நிமிடம் வரை ஊற வைத்து கழுவிய பின், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெயை சேர்த்து, இந்த பேஸ்ட்டை பாதத்தில் தேய்க்கவும். அப்படி செய்யும் போது, பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும்.
 6. ஒரு டீஸ்பூன் நீர்க்காத கிளிசரின், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து, கால் பித்த வெடிப்பின் மீது தடவுங்கள்.
  இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு, காலை எழுந்தவுடன் வெது வெதுப்பான நீரில் காலை கழுவி விடுங்கள்.
 7. பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும்.
 8. கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் பாத வெடிப்பு சரியாகிவிடும்.
 9. மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின் தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில்  பித்த வெடிப்பு முழுவதும் குணமாகும்.
 10. கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.
 11. வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.
 12. கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகிய வற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here