ஒரே வாரத்தில் முகம் பளபளக்க வேண்டுமா?

Want a face glow all week?

ஒரே வாரத்தில் உங்கள் அழகான சருமத்தை இலகுவான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தயார் செய்யலாம். (Want a face glow all week?) இதற்கென வீணே உங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவிட தேவையில்லை..

வீணே செயற்கையான முறையில் தயார் செய்து விநியோகிக்க படும் கிரீம்களை பயன்படுத்துவதால் சருமம் இளமை காலத்திலேயே வயதானவர் போல சருமம் சுருக்கங்கள் வர ஆரம்பித்திடும்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல”  அதிக விலை கொடுத்து வாங்குவதால் அதிக பலன் கிடைத்து விடாது..

இவற்றினை பயன்படுத்தி சருமத்தை வீணாகாது இயற்கையான முறையில் சருமத்தை பாதுகாத்து அழகாக மாற்றலாம். கருப்பாக உள்ளவர்கள் இனி கவலை வேண்டாம். ஒரே வாரத்தில் உங்கள் முகத்தை பளபளப்பாக மாற்றலாம்.

முகம் பளிச்சிட அழகு டிப்ஸ்…

*பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் ஊறப்போட்டு காலையில் மைய அரைத்து முகத்தில் தேய்த்து வர, முகம்  சிகப்பழகு பெறும்.
* எலுமிச்சம்பழச் சாறில் பாசிப்பயறு மாவு கலந்து முகத்தில் தடவி, ஒருமணி நேரம் கழித்துக் கழுவினால் முகம் நல்ல நிறம்  பெறும்.
* ஆப்பிள் பழத்தை நறுக்கித் தேனில் ஊற வைத்துச் சாப்பிட்டால், கண்கள் நல்ல அழகு பெறும்.
* உதட்டில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு சிறிதளவு பவுடரைத் தேய்த்துவிட்டுப் பின்னர் போட்டால் அதிக நேரம் லிப்ஸ்டிக்  அழியாமல் இருக்கும்.
* இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு, இரண்டு தேக்கரண்டி தயிர் இவற்றைக் கலந்து இரவில் முகத்தில் தேய்த்துவிட்டுப் பின்பு  நன்றாகக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், பகலில் போட்ட மேக்கப் சுத்தமாக நீங்கி, முகம் இயல்பான நிலைக்கு  வந்துவிடும்.
* தினமும் சுத்தமான ஆமணக்கு எண்ணெயைப் புருவங்களில் தேத்தால் புருவமுடி கறுப்பாகவும் கவர்ச்சியாகவும் தோன்றும்.
* பால் ஏட்டில் சில துளிகள் எலுமிச்சம் பழச் சாறு கலந்து குழைத்து முகத்தில் தடவிக்கொண்டு, உலர்ந்ததும் கழுவ வேண்டும்.  சில நாட்கள் தொடர்ந்து இப்படிச் செய்தால் முகம் தக்காளி போல பளபளக்கும்.
* முகம் பளபளப்பாக குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதை பஞ்சில் தொட்டு முகத்தில் பூசி அரைமணிநேரம்  சென்றதும் முகத்தைக் கழுவி விடுங்கள். தினமும் இப்படிச் செய்தால் நாளடைவில் முகம் பளிச்சிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here