உணவு வேளையில் நிறைய துரித உணவுகள், ரசாயன உணவுகள் எடுக்கக் கூடியவர்களுக்கு கண்டிப்பாக நீரிழிவு நோய் வருகிறது.Diabetics need to know
வேலைக்கு செல்பவர்கள் காலை வேளையில் சத்தான சாப்பாடு உட்க்கொள்ள நேரமில்லாமல் கோக், பெப்சி, மிரண்டா போன்ற குளிர்பானங்களை அருந்துவதனாலும் 6 மாதமோ அல்லது 1 வருடத்திலேயோ சக்கரை நோய் வந்துவிடும். சக்கரை நோய்க்கு அடிப்படை காரணம் உணவு முறை, இது அம்மா அப்பாவுக்கு இருந்தால் நமக்கும் வரும் என்பது உண்மையாக இருந்தாலும் அதைக் கண்டிப்பாக தடுக்க முடியும்.
இதை எப்படி தடுக்கலாம், என்றால் மருந்து ஓரளவிற்கு கட்டுப்படுத்திவிடும் ஆனால் முழுமையாக குணப்படுத்திவிடாது. உணவுகளை அடையாளப்படுத்தி, தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் சக்கரை நோயை முழுமையாக நம்மால் குணப்படுத்த முடியும்.
அறிகுறிகள்(Diabetes Symptoms)
- அதிக தாகம்
- அதிக பசி
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- பார்வை மங்குதல்
- எடை குறைதல் அல்லது கூடுதல்
- காயங்கள் ஆறும் தன்மை குறைதல்
- தோல் அரிப்பு
சேர்த்துக்கொள்ளவேண்டிய உணவுகள்
- கீரைகள்
- எலுமிச்சை
- வெங்காயம்
- புதினா
- நட்ஸ்
- தானியங்கள் (பருப்பு,பயறு)
- இஞ்சி
- ஆவியில் வேகவைத்த உணவுகள் (இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை)
- சூப்
- ரசம்
தவிர்க்கவேண்டிய உணவுகள்
- தேன்
- சக்கரை
- இனிப்பு பண்டங்கள்
- பொரித்த உணவுகள்
- இனிப்பான குளிர் பானங்கள், ஜீஸ் வகைகள்
- மது
- குளுக்கோஸ்
- நெய்
நீரிழிவு நோயை தடுப்பதற்கான உணவுகள் என்னென்? அதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். Diabetes Treatment
வெந்தயம்
இதில் கரையும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ஜீரணத்தின் வேகத்தை குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவுகளையும் குறைக்கும் , உணவில் அதிகளவு வெந்தயத்தை சேர்த்துக்கொள்ளவேண்டும், வெந்தயத்தை வறுத்து வைத்து தினமும் சாப்பிடுவர ரத்தத்தில் சக்கரையின் அளவு குறையும்.
பாகற்காய்

தினமும் உணவில் பாகற்காய் சேர்த்துக்கொண்டால் இதில் இருக்கும் சாரன்டின் (Charantin) ரத்த சக்கரை அளவை கரைக்க உதவும். இதிலுள்ள லெக்டின் (Lectin) பசியைக் கட்டுப்படுத்தி, உடலில் சேர்ந்திருக்கும் குளூக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
நெல்லி

இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ரத்த சக்கரை அளவை குறைக்கக்கூடியது. இதில் பாலிபீனால் (Polyphenol) சத்து அதிகம் இருக்கிறது. இதன்மூலம் ரத்தத்தில் சக்கரையின் அளவு குறையும். தினமும் 2 நெல்லிக்காய் சாப்பிட்டுவந்தால், ரத்த சக்கரை அளவை குறைக்கலாம்.
திரிபலா

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவையே இந்த திரிபலா, இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை தினமும் வெது வெதுப்பான நீரில் 1டீஸ்பூன் கலந்து குடித்து வந்தால் சக்கரை நோய் குணமாகும்.
கறிவேப்பிலை

இது இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும்.உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது தினமும் 10 முழு கறிவேப்பிலை இலைகளை தொடர்ச்சியாக 3 மாதங்கள் சாப்பிட்டுவந்தால் எப்படிப்பட்ட சக்கரை நோயும் முழுவதுமாக குணமாகும்.
கொய்யா

கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. அத்துடன் கொய்யா இலைகளும் சத்து மிகுந்தவை. இதனை காயவைத்து பொடியாக்கி நீரில் கொதிக்கவைத்து குடித்துவர சக்கரைநோய் வராமல் தடுக்கலாம்.
முருங்கை இலை

முருங்கை இலையில் அஸ்கார்பிக் ஆசிட் (Ascorbic acid) நிறைந்துள்ளது. இது, இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். உடலில் குளூக்கோஸ் அளவைச் சீராக்கி, இயற்கையான வழியில் டயாபடீஸை கட்டுப்படுத்தும்.
உடல்பயிற்சி
சரியான, முறையான உணவோடு உடற்பயிற்சி செய்வது சர்க்கரைநோயைக் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி, ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். தினமும் உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகோ (உடலில் சர்க்கரை அதிகமாகும் நேரம்) அல்லது காலை வெறும் வயிற்றிலோ உடற்பயிற்சி செய்யலாம்.