தொடர் தும்மளை போக்கும் அகத்தி இலை

akatthi ilaiyin maruththuva kunam Agathi leaf

 

அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே” என்ற ஒரு பழமொழியில் அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது. அகத்தியை வெற்றிலையைக் கொடிகால்களில் ஊன்று கால்களாக வளர்ப்பர். 

அகத்தியின் வேறு பெயர்கள்: அச்சம், முனி , கரீரம்

வகைகள்: சாழை, அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி 

இதிலும் அகத்தி , செவ்வகத்தி என இரு பிரிவு உள்ளது. இரண்டுக்குமே மருத்துவ குணங்கள் ஒன்றே. வெள்ளை பூவுடையது அகத்தி எனவும், சிவப்பு நிறம் கொண்டது செவ்வகத்தி எனவும் அறியலாம்.

  • அகத்தி கீரைச்சாறு ஒரு தே.கரண்டியும் தேன் ஐந்து தே.கரண்டியும் சேர்த்து கலந்து தலை உச்சியில் விரல்களால் தடவி வந்தால் குழந்தைகளுக்கு நீர்கோவையும், மூக்கில் சிறிது விட்டால் தலைவலியும் நீங்கும்.
  • இதன் பட்டையை கொதிக்க வைத்து குடிநீர் செய்து அம்மைக்காய்ச்சல், விஷக்காய்ச்சல் போன்றவற்றுக்கு கொடுத்து வரலாம்.
  • தண்டின் சாறு பெரியம்மையை குணப்படுத்தும். பீடி,சிகரெட்,சுருட்டு,மது போன்றவற்றை பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற விஷ சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் நீக்கும்.

 

தொடர் தும்மலால் அவதிப்படுபவர்களா நீங்கள்?

தொடர் தும்மலால் அவதிப்படுவார்களாயின் இனி எந்த கவலையுமில்லை. இலகுவில் உங்கள் தொடர் தும்மலை போக்க இலகுவாக தயார் செய்ய கூடிய முறையில் அகத்தியின் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன. அதில் தொடர் தும்மலை போக்குவதற்கு அகத்தி கீரை சாறு , அகத்தி பூ சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட்டு வர உடனடியாக நிவாரணம் பெறலாம்.

அகத்தி பூ சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர இருமல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அது மட்டுமின்றி அகத்தி பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டினால் ஏற்படும் பித்தம் குறைவடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here