மாதக்கணக்கில் தடைப்பட்ட மாதவிடாயை குணப்படுத்த என்ன செய்யலாம்.
மிக விரைவாக சிறுவயதிலேயே பூப்பெய்வதால் மாதவிடாய் அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையை ஏற்படுத்துகிறது, 10 வயதிலிருந்து 12 வயதிற்கு உட்பட்டவர்கள் மிக விரைவில் வயதிற்கு வந்துவிட்டார்கள் என்றால் அவர்களுக்கு ஒரு வருடம் வரை மாதவிடாய் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். அதை பற்றி கவலை பட தேவையில்லையோ காலப்போக்கில் அது சரி ஆகிவிடும்.
ஆனால் இளம்பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருப்பின் அதை உடனே சரிசெய்ய வேண்டும்.
சிலருக்கு மாதக்கணக்கில் மாதவிடாய் வராமல் இருக்கலாம், ஒரு மாதம் வரும் ஆறு மாதங்களுக்கு வராது. அப்படியான சமயத்தில் அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலவாறு பாதிக்கப் படுகிறார்கள். இதற்கு காரணம் கார்மோன் சமநிலை இன்மை அல்லது கருப்பைகளில் நீர்கட்டிகள் இருப்பது கூட காரணமாக இருக்கலாம்.
இப்படி மாதவிடாய் பிரச்சினை இருப்பவர்களுக்கு ஒரே நாளில் மாதவிடாய் சரிவர வருவதற்கு அனுபவம் மிக்க பாட்டி வைத்திய முறைகளை பார்ப்போம்.
கருப்பு எள்ளு
கருப்பு எள்ளு (கார்மோனை சமநிலைப்படுத்தும் ) மாதவிடாய் சுழற்சியை சரி செய்யு தன்மை எள்ளிற்கு உண்டு.
10-15 டீ ஸ்பூன் கருப்பு எள்ளை எடுத்து தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு நன்றாக ஊற வையுங்கள். இதனை (தண்ணீருடன் சேர்த்து) தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் வீதம் 1வாரம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முதல் 2 நாட்கள் சாப்பிட்டாலே மாதவிடாய் சரியாக வரும் வாய்ப்புள்ளது.
எள்ளுருண்டையும் சிறந்தது வீட்டிலேயே செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 நாட்கள் சாப்பிட்டு வர தடைபட்ட மாதவிடாய் சரியாகும்.
ஓமம்
ஓமத்தை (உடலிலுள்ள கழிவுகளை நீக்கக்கூடியது, ஈஸ்ரயன் கார்மோனை அதிகரித்து மாதவிடாய் சுழற்சியை சரி செய்யும்)வறுத்து பொடி செய்து எடுத்துக்கொள்ளுங்கள், இதை தினமும் காலையில் வெறும் வயிற்றிலும் மாலையிலும் 1 கப் பாலில் 1 ஸ்பூன் ஓமம் கலந்து குடித்துவர 2 நாட்களிலேயே மாதவிடாய் சரியாக வரும்.
கருஞ்சீரகம், இஞ்சி
1 ஸ்பூன் கருஞ்சிரகத்துடன், சிறு துண்டு இஞ்சியை சேர்த்து 1 கப் தண்ணீரில் போட்டு அது பாதியாகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டி இதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து காலை மாலை என 2 நாட்கள் குடித்து வர மாதவிலக்கு விரைவாக வந்துவிடும்.
பப்பாளி பழம் , அன்னாசி பழம் உட்கொண்டால் மாதவிடாய் சுழற்சி விரைவில் வரும்