இலகுவான வீட்டு பராமரிப்பு குறிப்புகள்

வீட்டு பராமரிப்பு குறிப்புகள்

வீட்டு பராமரிப்பு குறிப்புகள்

இரும்புப் பொருள்களில் படிந்துள்ள துருவை நீக்க உப்புக் கரைத்த எலுமிச்சை சாற்றைத் தடவினால் துரு நீங்கி விடும்.

அதிக சத்தமாக வைப்பது ஒலி பெருக்கியின் ஆயுளைக்  குறைக்கும். தூசியும் பூச்சியும் அடையாமல் பாதுகாப்பது முக்கியம்.

கேபிள் அதிக நீளமாக இருந்தால் அதை மடித்தோ சுருட்டியோ வைக்கக் கூடாது. தேவையான நீளத்துக்கு வெட்டிக் கொள்ளவது தான் நல்லது. மடித்து வைப்பது படத்தின் தரத்தை குறைக்கும்.

சேமித்து வைப்பதற்குப் பிளாஸ்டிக், கண்ணாடி ஜாடிகள் உகந்தவை.

குளிக்கப் பயன்படுத்தும் சோப் தேய்ந்து கடைசியாக மிஞ்சும் சிறிய துண்டுகளை அலுமாரி அல்லது பெட்டியில் வைத்திருக்கும் உடைகளுக்கிடையில் போட்டு வைத்தால் துணிகள் மணமாக இருப்பதுடன் கரப்பான் பூச்சி அண்டாமலும் இருக்கும்.

ஆட்டோமாடிக் வாட்சுகளை மேஜை மீது அதிக நேரம் வைத்திருந்தால் அவை நின்று விடக் கூடும். அதை ரிப்ரிஜிரேட்டர் மீது வைத்திருந்தால் அதன் அதிர்வினால் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும்.

நியூஸ் பேப்பரை கனமாக மடித்துக் கொண்டு ஜன்னல்களைத் துடைத்தால் அதிலுள்ள மை, பாலிஷ் போலப் பயன்பட்டு அழுக்கு நீங்கி சுத்தமாகும்.

அழுக்குப் படிந்து வைர நகைகள் பிரகாசம் குறைந்து காணப்பட்டால் பஞ்சை மெதிலேடட் ஸ்பிரிட்டில் நனைத்துக் கொண்டு அதனால் துடைத்தால் அழுக்கு போய்விடும்.

அவுரி இலையை அரைத்துச் சாறு எடுத்து  நீருடன் கலந்து  சுவற்றிலும் தரையிலும் தெளித்து வைத்தால் கொசு வராது.

கண்ணாடிப் பாத்திரங்களை ஊர்விட்டு ஊர் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தால் அவை உடையாமல் பத்திரப்படுத்த எளிய வழி இந்த பாத்திரங்களை நீரில் நனைத்து எடுத்து அதன் மீது நியூஸ் பேப்பரை சுற்றுங்கள். காகிதம் ஒட்டிக் கொள்ளும். மீண்டும் ஒரு காகிதத்தால் சுற்றி அட்டைப் பெட்டியில் அடுக்குங்கள். உடையாமல் பாதுகாக்கலாம்.

டி.வியை நிறுத்தும்போது முதலில் டி.வியில் உள்ள சுவிட்சை  அணைத்து விட்டுப் பிறகு மின் சப்ளையைத் துண்டிக்கும் சுவிட்சை அணைக்க வேண்டும். டி.வியை இயக்க விரும்பும் போது முதலில் மின் சப்ளை சுவிட்சைப் போட்டு விட்டு பிறகு டி.வி சுவிட்சைப் போட வேண்டும்.

மழைக்காலத்தில் வீட்டுக்குள் ஈசல் தொல்லை அதிகம் இருக்கும். எண்ணெய்யில் தேய்த்த  காகிதத்தை விளக்கில் கட்டி வைத்தால் பூச்சிகள் அதில் ஒட்டிக் கொண்டு விடும்.

டெட்டர்ஜெண்ட் பவுடரைப் பயன்படுத்திச் சலவை செய்பவர்கள்  வாளி நீரில் பவுடரை போட்டு நுரை வர சிலுப்பிக் கொண்டு அழுக்குத் துணிகளை அதனுள் போட்டுக்   கசக்குவது வழக்கம். அழுக்குத் துணிகளை முதலில் வெறும் நீரில் அலசி எடுத்து விட்டுப் பிறகு பவுடர் கரைத்த நீரில் போட்டுக் கசக்கினால் சலவை மேலும் சுத்தமாக இருக்கும்.

துணியில் மைக்கறை பட்டு விட்டால் அந்த இடத்தை சூடான பாலில் முக்கி ஐந்து நிமிடம் வைத்திருக்கவும். பிறகு சோப்புப் போட்டு துவைத்தால் கறை போய் விடும்.

பால் பாயிண்ட் பேனா மை பட்டுக் கறை ஏற்பட்டிருந்தால் அடியில் ஒரு பிளாஸ்டிக் பேப்பரை வைத்துக் கறை படிந்த இடத்தில் ஸ்பிரிட் தடவித் தேய்த்தால் அகன்று விடும்.

சேற்றுக்  கறையை போக்க உருளைக்கிழங்கை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும். 

ஜிப் வைத்துத் தைத்த பைகள் போன்றவற்றில் சில சமயங்களில் ஜிப் நகர மறுத்து தொந்தரவு தரும். ஒரு மெழுகுவர்த்தியால் ஜிப் மீது சில முறை தேய்த்து விட்டுப் பிறகு இழுத்தால் சுலபமாக நகரும்.

குளிர் சாதன பெட்டியின் உட்புற காஸ்கெட்டில் கொஞ்சம் டால்கம் பவுடரைத் தூவி வைத்தால் அது கறுத்துப் போகாமல் இருப்பதுடன் காற்றுப் போகாமலும் இருக்கும்.

நமுத்துப் போன பிஸ்கட்டுகளை லேசான சூட்டில் உள்ள தோசைக் கல்லில் பரவலாக வைத்து சற்று நேரம் கழித்து எடுத்து வைத்தால் பழைய மொரமொரப்பு வந்து விடும்.

வெந்நீரின் சூடு குறையாமல் அதிக நேரம் பாதுகாக்க ஒரு சுலபமான வழி வெந்நீர் வைத்துள்ள வாளியை வெளிப்புறம் இரண்டு மூன்று நியூஸ் பேப்பர்களைப் போட்டு மூடி வையுங்கள். வெப்பக் கடத்தலைக் காகிதம் கடத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here