பெண்களுக்கான பயனுள்ள வீட்டு உபயோக குறிப்புகள்

பெண்களுக்கான வீட்டு குறிப்புகள்

பயனுள்ள 20 வீட்டு உபயோக குறிப்புகள்

கெட்டிலின் உட்புறம் வெண்படலம் படிந்ததுபோல கறை ஏற்பட்டுவிடும். இது நீரிலுள்ள உப்புக்கள் மற்றும் அழுக்குகளால் ஏற்படுவது. கெட்டில் முழுவதும் நீரை நிரப்பி ஒரு தேக்கரண்டி வினீகர் விட்டுக் கொதிக்க விட்டால் வெள்ளைக் கறை போய்விடும்.

மேஜை விரிப்பில் தேநீர் சிந்தி விட்டால் உடனே அந்த இடத்தில் கொஞ்சம் சக்கரையை தூவி விடுங்கள். கறை படியாது.

காபி பில்டர் துவாரங்கள் அடைத்துக் கொண்டு இருந்தால் அதைச் சற்று நேரம் அனல் மீது காட்டவும். அடைத்துக் கொண்டிருக்கும் பொருள் வெளிப்பட்டு விடும்.

பிரம்பு நாற்காலிகள் மஞ்சள் நிறமடைந்து பொலிவிழந்து காணப்பட்டால் அரை லிட்டர் நீரில் அறை ஸ்பூன் ஆக்சாலிக் ஆசிட் விட்டுக் கரைத்து தேய்த்து அப்படியே காய விடவும். கையினால் தேய்க்க கூடாது.

வெள்ளிப் பாத்திரங்கள் காற்றுப் பட்டு கருத்துப் போவது இயல்பு. கொஞ்சம் கடலை மாவில் எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பிசைந்து அதனால் வெள்ளிப் பாத்திரங்களை அழுத்தித் தேய்த்து சுத்தமான நீரில் கழுவினால் பளபளவென்றாகிவிடும்.

சீப்புகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கிருமிகள் சேர்ந்து பல தொல்லைகள் உண்டாகும். ஒரு பாத்திரத்தில் இரண்டு மேசைக் கரண்டி வாஷிங் சோடாவைப் போட்டுக் கரைத்து அதில் சீப்புக்களை அரை மணி நேரம் போட்டு வைத்து எடுத்தால் அழுக்குகள் எல்லாம் நீங்கிச் சுத்தமாகி விடும்.

பருத்திப் புடவைகளுக்கு கஞ்சி போடும்போது நீரில் கொஞ்சம் படிகாரத்தை சேர்த்து கொண்டால் புடவை நல்ல மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

நைலான் மற்றும் செயற்கை இழைத் துணிகள் நமது நாட்டு வெப்பநிலைக்கு ஏற்றவையல்ல. ஆசைக்கு எப்போதாவது அணியலாம். அன்றாட உபயோகத்திற்குக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். உடலில் காற்றுப் படமால் செய்து விடக்கூடியவை இவை. கண்டிப்பாக கோடையில் அணியக்கூடாது.

அழுக்குப் படிந்த பல்புகளைச் சுத்தப்படுத்துவதற்கு அவற்றை நீர் விட்டு கழுவுவது கூடாது. ஈரத்துணியால் கண்ணாடிப் பகுதியை மட்டும் துடைத்து அழுக்கை போக்குவதுதான் சரியான வழி. உலோகப் பகுதியில் ஈரம் இருப்பது பல்ப் ப்யூஸ் ஆக வழி வகுக்கும்.

சலவை செய்து வந்த துணிகளை வெயிலில் போட்டு எடுத்துப் பிறகு உடுத்துவது நல்ல வழக்கம்.

கம்பளி உடைகள் வைத்திருக்கும் அலுமாரி அல்லது பெட்டியில் கொஞ்சம் வேப்பிலை அல்லது மிளகை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. கண்ணுக்கு தெரியாத பூச்சிகளால் உடைகளில் ஓட்டை விழுவதை இதனால் தடுக்கலாம்.

தேங்காய் எண்ணெய்யை அதிக நாள் வைத்திருந்தால் காறல் வாடை வந்து விடும். கொஞ்சம் கற்பூரத்தைப் பொடி செய்து எண்ணெய்யில் போட்டு வைத்தால் பல நாட்களுக்கு காறல் எடுக்காமல் இருப்பதுடன் நல்ல மணமாகவும் இருக்கும்

பிளாஸ்டிக் பக்கெட்டுகளும் குவளைகளும் அழுக்கில்லாமல் சுத்தமாக இருந்தால் தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். அழுக்குப் படிந்து நிறம் மங்கியிருந்தால் ஒரு துணியை மண்ணெண்ணெய்யில் நனைத்து நன்றாக தேய்த்து தடவிப் பத்து நிமிடம் கழித்து அதே துணியில் சிறிது சர்ப் பவுடரைப் போட்டுக்கொண்டு மீண்டும் துடைத்தால் அழுக்குகள் அகன்று பளிச்சென்றாகி விடும்.

முகம் பார்க்கும் கண்ணாடி மங்கலாக இருந்தால் துணிக்குப் போடும் நீலத்தை ஈரத்துணியில் தொட்டுக் கொண்டு கண்ணாடியில்  மீது பூசினாற் போல் மெழுகி விட்டு, சுத்தமான துணியால் துடைத்து விட்டால் பளிச்சென்றாகி விடும்.

அலுமினியப் பாத்திரங்களில் படியும்  தீசலை அகற்றுவதற்கு வெங்காயத்தை நறுக்கிப்போட்டு நீர் விட்டு கொதிக்க விடவும்.

புதிதாக வாங்கிய செருப்பும் பூட்சும்  காலைக் கடிப்பது உண்டு. உட்புறம் புளித்த தயிரை இரவில் தடவி வைத்துக் காலையில் துடைத்து விட்டால் தோல் மிருதுவாகி விடும். கடிக்காது.

வெயிலில் சாமான்களை காய வைக்கும் போது பறவைகள் வந்து கொத்தாமல் இருக்கக் காவல் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அப்பொருளின் மீது ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்தால் போதும் பறவைகள் வராது.

காப்பி, தேநீர் கறையைப் போக்க அந்த இடத்தைச் சோப்பு கரைத்த நீரில் கழுவிய பின்பு உப்பு நீரில் நனைக்கவும்.

ரத்த கறை எளிதில் போகாது. முதலில் ஹைட்ரஜன் பெராக்சைடிலும் பிறகு அம்மோனியா திரவத்திலும் அந்த இடத்தை முக்கி எடுக்க வேண்டும்.

சிவப்பு மைக்கறை போவதற்கு தக்காளி பழத்தையும் உப்பையும் அந்த இடத்தில் தேய்த்து நீரில் அலச வேண்டும். தயிரைத் தடவி தேய்த்தாலும் போகும்.

துரு கறைப் பட்டிருந்தால் எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து அந்த இடத்தில் தேய்த்து, பிறகு துவைத்தால் போய்விடும்.

டப்பாக்களை சுத்தப்படுத்த சோப்பு கரைத்த நீரில் சிறிது மண்ணெண்ணெயை கலந்து கழுவினால் துருக் கறை போய் பளிச்சென்றாகி விடும்.

சூடுபட்டுப் பழுப்பேறிய இடத்தில் மைதா மாவைப் பிசைந்து தடவி வெயிலில் காயப் போட்டால் பழுப்பு மறந்து விடும்.

ரிப்பேராகி போன குடையின் கம்பிகளை முறுக்கு, வடை போன்ற பலகாரங்களைச் செய்யும்போது  அவற்றை வாணலியிலிருந்து எடுக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.

பூட்ஸ் பளபளப்பாக இருக்க இரவில் சோடா உப்பை தூவி விட்டு, மறுதினம் காலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் உப்பைத் துடைத்தால் பூட்ஸ் பளபளப்பாக இருக்கும்.

சட்டைப் பித்தான்கள் அடிக்கடி அறுந்து போகாமல் இருக்க பித்தான்களை எலாஸ்டிக் நூலினால் தைக்கலாம். இல்லாவிட்டால் சாதாரண நூலில் பாலைத் தடவி உலர வைத்தப் பிறகு தைக்கலாம்.

பட்டுத்துணிகள், டெரிகாட்டன், டெலிரின் போன்ற துணிகளை நிழலில் காய வைக்க வேண்டும். அப்படிக் காய வைத்தால் துணிகள் அதிக நாட்கள் வரை உழைக்கும்.

துணிகளில் இருக்கும் சாயம் போகாமல் இருக்க துணிகளை நிழலில் காய வைக்க வேண்டும். அப்படிக் காய வைத்தால் துணிகள் அதிக நாட்கள் வரை உழைக்கும்.

துணிகளில் இருக்கும் சாயம் போகாமலிருக்க துணிகளை கடுக்காய் ஊற வைத்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து எடுத்தால் சாயம் போகாது.

சன்னல் திரைகளைத் தைப்பதற்கு முன்பு, தைக்க பயன்படுத்தும் நீரை ஈரப்படுத்தி பிறகு தைத்தால் திரையின் பின்னால் சுருக்கம் விழாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here