பருக்களை நீக்கி முகத்தை மென்மையாக்க

muka paruvai neekki mukathai menmaiyakka maruthuvam. Remove pimples and smooth the face.

பருக்களை நீக்கி முகத்தை மென்மையாக்க

அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளனர். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை.

இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.

தேவையான பொருட்கள்

  • உலர்ந்த மகிழம் பூ பொடி 200 கிராம்
  • கிச்சிலி கிழங்கு பொடி 100 கிராம்
  • கஸ்தூரி மஞ்சள் பொடி 100 கிராம்
  • கோரை கிழங்கு பொடி 100 கிராம்
  • உலர்ந்த சந்தனத் தூள் 150 கிராம்

செய்முறை

இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் பருக்கள் வடுக்கள் இன்றி முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும். இந்த மருத்துவ முறையை வராகமித்ரர் அங்கரசனைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here