சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் நோவும் ஏற்படுவது ஏன்?

இவ்வாறு சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் வலிக்கு என்ன ... சிறுநீர் கழிக்கும் போது அல்லது கழித்த பின்னர் எரிச்சல் ஏன் உண்டாகிறது, ... சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாக காரணம்,

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும் நோவும் ஏற்படுவது ஏன்?

சிறுநீர் வெளியேறும் பாதையில் தொற்று

சிறுநீரக தொகுதியானது , யூரிட்டர் , சிறு நீர்ப்பை , சிறுநீரகம் மற்றும் யூரேத்திராவை உள்ளடக்கியது . சிறுநீர் வெளியேறும் பாதை யில் ஏற்படும் தொற்று பெரும்பாலும் பக்றீ ரியாக்களால் ஏற்படுவது ( E.COLI ) . நீங்கள் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் ஆண்களை விட உங்களுக்கு இத்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். ( ஏன் என்றால் பெண்களின் யூரேத்திரா ஆண்களுடைய யூரேத்திராவுடன் ஒப்பிடுகையில் சற்று நீளம் குறைவானது. எனவே பக்றீரியாத் தொற்று ஏற்படின் அது இலகுவாக சிறுநீர்ப்பையைச் சென்றடைந்துவிடும் ) உடலில் ஏற்படும் தொற்றுக்களில், சிறுநீர் வெளியேறும் பாதை தொற்றானது இரண்டாம் இடத்தை வகிக்கும் பொதுவான தொற்றாகும்.

தொற்றுக்கான அறிகுறிகள்

நோயாளியின் வயது, தொற்றின் தீவிரத்தன்மை, தொற்று உண்டாகும் சிறுநீரகத் தொகுதியின் பாகம் என்பவற்றுக்கு ஏற்ப வேறுபடும் .

1. சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் / வலி

2. சிறுநீர் கழிக்கும் தடவை அதிகரித்தல்

3. சிறுநீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுதல்

4. துர்நாற்றத்துடன் கழியும் சிறுநீர்

5. மேகமூட்டம் போல ( Cloudy ) சிறுநீர்

6. சிவப்பு / குருதியுடன் கலந்த சிறுநீர் ( Cococola- கொக்ககோலா போன்ற )

அடிப்பாக வயிற்றுவலி, காய்ச்சல் / குளிர்காய்ச்சல், முதுகில் மேற்புறமும் ஒரு புறத்துவலி வாந்தி, நலிவான உடல்நிலை. இவ்வாறான அறிகுறிகள் ஏதும் ஏற்படின் மருத்துவ உதவியை உடனடியாக நாட வேண்டும்.


 

தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள்

1. சிறுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்படுதல்

2. Sexually active – ஒப்பீட்டளவில், கிரமமாக உடலுறவு மேற்கொள்வோர்

3. பிறப்பிலிருந்து வரும் அசாதாரணமான கட்டமைப்பு. பெரும்பாலும் சிறார்களில் இது காணப்படும். Vesicoureteric Reflex ( வழமையாக சிறுநீர் கீழ்நோக்கி வருதல் வேண்டும். இதற்கு மாறாக சிறுநீர் மேலே நோக்கி செல்வதாகும். )

4. சிறுநீர்ப்பை / யூரீட்டர் / யூரேத்திரா / சிறுநீரக- கற்கள்

5. catheterization மருத்துவ தேவைகளுக்காக உடலினுள் செலுத்தப்பட்டிருக்கும் கதீட்டர்கள்.

6. Benign Prostatic hyperplasia – புரொஸ்டேட் சுரப்பி விரிவதால் 55-60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இதனால் ஏற்படும் சிறு நீர்த் தொற்று.

7. நோயெதிர்ப்பு சக்தி உடலில் குறையும் வண்ணம் ஏதும் நோயுள்ளவர்கள்

உதாரணம் : நீரிழிவு , எய்ட்ஸ் , புற்றுநோய்.

மீண்டும் மீண்டும் / குறைந்த கால இடைவெளியினுள் ஏற்படும் இத்தொற்றால் வயது முதிர்ந்த வர்கள் நிரந்தர பாதிப்பு எதனையும் அடைவதில்லை. ஆனால் சிறுவர்கள் குழந்தைகளை பொறுத்தவரையில் காலதாமதமோ அல்லது முறையான சிகிச்சையோ அளிக்கப்படாத பட்சத்தில் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் உண்டு. எனவே சிறுநீர்த் தொற்று சிறார்கள் விடயத்தில் மிக மிக அவதானமாக கையாளப்பட வேண்டிய ஒன்று.

மருத்துவர் உங்களின் சிறுநீரைப் பரிசோதிப்பர்

1. UFR ( Urine full report ) 2.Urine cullture & ABST இதுவே தொற்றை உறுதிப்படுத்தும் முதன்மையான சோதனை
ANTIBIOTIC – அன்டிபயாட்டிக் உட்கொள்ள முதல் செய்ய வேண்டியது. குறிப்பாக எந்த பக்றீரியா தொற்றை ஏற்படுத்தியது என கண்டறியப்படும்.

FBC – Full Blood Count
RFT – Renal function test இவை மேலதிகமாக மேற்கொள்ளப்படும்.

இவை அனைத்தின் பின்னரும் மருந்தளித்தும் மீண்டும் மீண்டும் சிறு நீர்த் தொற்று ஏற்படின் அல்லது நோயாளி குணமடையாதவிடத்தில் USS | xray – அல்ட்ராசவுண்ட் சோதனை / எக்றோ சோதனை மேற்கொள்ளப்படும்.

CT Scan / MRI Scan மூலம் வயிற்றின் அடிப்பகுதி படமெடுக்கப்படும்.

Voiding Cystourethrogram
Intravenous Urography

காசநோய் உள்ளதா என்று சோதித்தல் Cystoscopy / Urodynamics


இத்தொற்றை தடுக்கும் வழிமுறைகள்

1. அன்றாடம் 3-4 லீற்றர் திரவ நீர் உட்கொள்கை. இது பக்றீரியாவை சிறுநீர் பாதையிலிருந்து வெளியேற்ற உதவும். ( Flushing effect )

2. குறித்த கால இடைவெளியில் ( 2/3 மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பதை பழக்கமாகக் கொண்டிருத்தல்.

3. சிறுநீரை அடக்கி வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

4. Vitc அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளுதல்.

5. மலச்சிக்கலை தவிர்த்தல் / உரிய சிகிச்சை மேற்கொள்ளுதல்.

6. பெண்கள் முன்புறத்திலிருந்து பின்புறமாக சுத்திகரிக்கையில் நன்றாக கழுவவேண்டும். ( இது பக்றீரியாக்கள் பெண்குறியிலிருந்து யூரேத்திராவுக்கு பரவுவதை தடுக்கும் )

7. பிறப்புறுப்பையும் மலவாசலையும் உடலுறவுக்கு முன்னும் பின்னும் நன்றாக சுத்திகரித்தல் வேண்டும் .

8. நன்கு காற்று உட்புகக்கூடிய உடலுக்கு ஒத்த சுகாதாரமான உள்ளாடையணிதல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here