சாதாரண காய்ச்சலுக்கு நில வேம்பு குடிநீர் பயன் பட்டுவருகிறது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.. ஆனால் சளி, அதிக இருமல், தொண்டை வலி, காய்ச்சல் என்று கபம் சார்ந்த அறிகுறிகள் உள்ள கொரோனா போன்ற வைரஸ் காய்ச்சலுக்கு சந்தனம், வெட்டிவேர், விலாமிச்சம் வேர் போன்ற அதிக குளிர்ச்சி உள்ள நிலவேம்பு குடிநீர் அதிக பலன் (எதிர்ப்பு சக்தி தரலாம்) அளிக்காது என்றே கருதுகிறேன்.
கப சுர குடிநீர் கீழ் கண்ட மூலிகைகளை உள்ளடக்கியது ..
- சுக்கு
- திப்பிலி
- இலவங்கம்
- சிறுகாஞ்சொறி_வேர்
- அக்கிரகார_வேர்
- முள்ளி_வேர்
- கடுக்காய்_தோல்
- ஆடாதொடை_இலை
- கற்பூர_வள்ளி_இலை
- கோஷ்டம்
- சீந்தில்_தண்டு
- சிறு_தேக்கு
- நிலவேம்பு_சமூலம்
- வட்ட_திருப்பி_வேர்
- கோரை_கிழங்கு
செய்முறை
மேலே கூறிய அனைத்து மூலிகைகளையும் சம அளவில் சேர்த்து -கஷாயமாக – குடிநீராக அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
பத்து கிராம் கஷாயத்தை இருநூறு மிலி தண்ணீரில் நன்கு காய்ச்சி ஐம்பது மிலியாக்கி வடிகட்டி காலை மாலை ஆகாரத்திற்கு முன் தொடர்ந்து பத்து நாட்கள் பருகி வர பன்றி காய்ச்சல் குணமாகும். தொடர்ந்து ஐந்து நாட்கள் பருகி வர வைரஸ் காய்ச்சல் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்திட முடியும்.